pppp

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது கெடார். அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு அவருக்கு சுடிதார் வாங்கி வந்திருப்பதாகக் கூறி அதை வாங்கிச் செல்லும்படி அலமேலு என்பவரது நிலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

Advertisment

அந்தப் பெண்ணும் அதை நம்பி சுபாஷ் கூறிய அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுபாஷ், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் நாகேஷ் மகன் விக்னேஷ் (வயது 25), பழனிவேல் மகன் சுபாஷ் (வயது 22) ஆகிய மூவரும் ஒரு காருடன் அங்கே காத்திருந்தனர். அந்த இளம்பெண் சுபாஷ் அருகில் வந்ததும் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி அந்தக் காரின் பின் பக்கம் ஏற்றியுள்ளனர் காரின் பின்பக்க இருக்கையில் வைத்தே அந்தப் பெண்னை மூவரும்பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சப் இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் அந்த மூன்று இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.