Advertisment

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடுமை...

Gingee

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 7 மணி அளவில் சிறுமியை தாத்தா விவசாய நிலத்தில்இருக்குமாறு சொல்லிவிட்டு,தனது மாடுகளை ஓட்டிதரிசுநிலப் பகுதியில்மேய்ச்சலுக்கு கட்டிவிட்டுமீண்டும் தனது விவசாயம் நிலத்திற்கு திரும்பி வந்தார்.

Advertisment

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 30) சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாத்தா ராஜேந்திரனை பிடித்து இழுத்துக் கீழே தள்ளினார். மிரண்டுபோன ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அப்போது சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் கடந்த நான்கு மாதமாக தனியாக இருக்கும்போது அவ்வப்போது வந்து இப்படித்தான் தவறாக நடந்து கொள்கிறான் என்று அப்பாவித்தனமாக கூறியுள்ளார்.

Advertisment

தாத்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். தனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரியாமலேயே உள்ள அந்த மனநலம் பாதித்த சிறுமியிடம், ராஜேந்திரன் என்ற மிருகம் செய்த செயல்களைப் பற்றி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசாரிடம்புகார் அளித்துள்ளார். ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.போலீசார் அவரை தேடி வருவதாகதகவல் வெளியாகி உள்ளது.

Gingee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe