சாலையோரம் சடலமாக கிடந்த லாரி டிரைவர்!

Villupuram incident

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது கோலியனூர் மேல் பாதி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(30). லாரி டிரைவரான இவர் அவ்வப்போது பல்வேறு ஊர்களுக்கு லாரி சரக்கு ஏற்றி சென்று இறக்கி விட்டு திரும்பி ஊருக்கு வருவார். அவர் இன்று தனது ஊரிலிருந்து டூவீலரில் புறப்பட்டு வரும்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

கழுத்தறுபட்ட நிலையில் தமிழ்செல்வன் சாலையோரம் சடலமாக விழுந்து கிடந்தார். தகவலறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துள்ளார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்செல்வன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Investigation police villupuram
இதையும் படியுங்கள்
Subscribe