விழுப்புரம் பூந்தோட்டம் மேல் வன்னியர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காஜா( 40). ரவுடியான இவர் விழுப்புரம் கணபதி நகரிலுள்ள சக ரவுடியான கார்த்தி என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
Advertisment
விழுப்புரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், முன்விரோத தகராறில் குடிபோதையில் அவரது நண்பர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.