விழுப்புரம் மாவட்டத்தில் மர்மமான முறையில் பெண் கொலை...

விழுப்புரம் மாவட்டம்கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி தில்லைநாயகி (45). இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்து விட்டு சென்றுள்ளனர்.

villupuram incident

இந்த நிலையில் தில்லைநாயகி குடும்பத்தினர், தண்ணீர் பாய்ச்ச சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை என்றதும் இரவு முழுக்க தேடியுள்ளனர். கண்டமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். விசாரணையின் போது, தில்லைநாயகியின் உடல் அருகில் இருக்கும் கரும்பு வயலில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் காணாமல் போயிருந்ததாக தெரிய வருகிறது.

villupuram incident

இதையடுத்து கண்டமங்கலம் ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து தில்லைநாயகியின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident villupuram
இதையும் படியுங்கள்
Subscribe