உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே விழுப்புரத்திலிருந்து விருத்தாச்சலம் செல்லும் இரயில்வே இருப்புப் பாதையின் 30 அடி ஆழத்தில் அடையாளம் தெரியாத சுமார் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/railway in.jpg)
இறந்து கிடப்பவர் இரயில் விபத்தில் இறந்தாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது யாராவது திட்டமிட்டு கொலை செய்து தூக்கி வீசி விட்டுச் சென்றார்களா என சம்பவ இடத்தில் விருத்தாச்சலம் இரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்.
இறந்து கிடக்கும் ஆண் சடலத்தின் உடையானது பேண்ட் ஷேர்ட் இரண்டுமே காக்கி யூனிபார்மில் உள்ளது.இறந்தவரின் காக்கி சட்டையில் செந்தில் டையிலர் ராமநத்தம் ஊர் பெயர் உள்ளது. இறந்துபோய் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என இறந்தவரின் உடல் அமைப்பு காட்டுகிறது.
Follow Us