Skip to main content

செஞ்சியில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி 

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

villupuram genji bear movement public feared
மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு, சோமசமுத்திரம், வடகால், கோணை புதூர், ஜே ஜே நகர் ஆகிய மலையோர கிராமப் பகுதிகளில் கடந்த வாரம் கரடி நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் நேரில் பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோணை புதூர் பகுதியில் உலா வரும் கரடியானது மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, கன்றுக் குட்டி ஆகியவற்றைத் தாக்கி காயப்படுத்தி வந்துள்ளது.

 

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது கரடி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வனச்சரகர் வெங்கடேசன் மேற்பார்வையில் கோணை புதூர் பகுதி மலையடிவாரத்தில் கரடியைp பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். அந்தக் கூண்டில் வாழைப்பழம் வைக்கப்பட்டது. வாழைப்பழம் சாப்பிட வரும்போது கூண்டில் கரடி சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கரடி கூண்டுக்குள் வருவதற்குள் அப்பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகள் கரடிக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்த வாழைப்பழங்களை எடுத்துச் சென்றுவிட்டன. இதையடுத்து கூண்டுக்குள் பலாப்பழத்தை வைத்து கரடியைப் பிடிக்க முடிவு செய்துள்ளனர் வனத்துறையினர்.

 

இந்த நிலையில் நேற்று முழுவதும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இல்லை என்றும் வேறு பகுதிக்கு உணவு தேடி கரடி சென்றிருக்கலாம் என்று எண்ணிய வனத்துறையினர். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். கரடியைப் பிடிக்க கூண்டு வைத்து 4 நாட்கள் ஆகியும் அது பிடிபடாதது பொதுமக்கள் மத்தியில் மேலும் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

கடந்த பல ஆண்டுகளாக செஞ்சி மலைப் பகுதி கிராமங்களில் கரடி நடமாட்டம் இல்லை என்றும் திடீரென தற்போது கரடி அப்பகுதிக்கு எப்படி வந்தது என மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரடி பிடிபடாமல் இருப்பதால் வரும் நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை மீண்டும் தாக்கினால் என்ன செய்வது என்ற பயத்திலும் உள்ளனர் அப்பகுதி மக்கள். கரடி கூண்டுக்குள் அகப்படவில்லை என்றால் வலை விரித்தாவது பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.