/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/freezer-box.jpg)
துக்க வீட்டில் வைக்கப்பட்ட ஃபிரீஸர் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள் சாத்தனூரில் தேவா ( வயது 35) என்பவர் உடல் நல் குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் ஃபிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இறந்த தேவாவின் தம்பி பகவான் என்பவர் தேவாவின் உடலை தொட்டு அழுதபோது மின்சாரம் தாக்கியுள்ளது. அப்போது அருகில் இருந்த பெண்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது அவர்களது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்ப்ட்டது.
அதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்த 15 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துக்க வீட்டில் வைக்கப்பட்ட ஃபிரீஸர் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)