Advertisment

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Villupuram dt Aragandanallur Kottamarudur village lake incident

Advertisment

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது கோட்டமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 3 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மீன் பிடிக்க இறங்கிய 3 சிறுவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த 3 சிறுவர்களும் மனம்பூண்டி என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

children incident Lake villupuram
இதையும் படியுங்கள்
Subscribe