/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks324.jpg)
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "குடும்பத்தைக் கட்சியோடு இணைத்துப் பாடுபடுகிறேன். நேரிடையாக அரசியலுக்கு வரவில்லை; சிறு வயதிலிருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன். தி.மு.க. மீது போடப்பட்டவை அரசியல் ரீதியான வழக்குகள்; அ.தி.மு.க.வில் ஜெ. உட்பட நான்கு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் கூட மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தடுக்க முடியாது" என்றார்.
தமிழக அரசு தடை விதித்ததால் கிராம சபைக் கூட்டத்தை 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். மேலும், மக்கள் கிராம சபைக் கூட்டத்தை மரக்காணத்தில் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறிக் கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)