கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவி ஏப்ரல் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6- ஆம் தேதி வரை 16 நாள் நடக்கவிருந்த நிலையில் திருவிழா ரத்தாகியுள்ளது. திருவிழா ரத்து பற்றி 6 கிராமத்து பஞ்சாயத்தார்கள் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பியிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.அதில் கரோனாவால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kuvagam999.jpg)
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் விழாவில் பல மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)