Advertisment

43 லட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவான வங்கி ஊழியர்; மேலாளர் பரபரப்பு புகார்!

villupuram chinthamani village bank cashier mukesh cash incident 

Advertisment

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வங்கி ஒன்று செயல்படுகிறது இந்த வங்கியில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் வரவு செலவுக்கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வங்கி கடன் உதவியும் செய்து வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வரும் பிரியதர்ஷினி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேராக சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் வளவனூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் வங்கியில் காசாளராக வேலை செய்து வருவதாகவும் அவர் நேற்று காலை 10 மணி அளவில் வங்கிக்கு பணி செய்வதற்காக வந்தவர் சுமார் அரை மணி நேரம் கழித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டு திரும்பி வருவதாக மேலாளரிடம் அனுமதி கேட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் வங்கிக்கு திரும்பி வரவில்லை சந்தேகம் அடைந்த மேலாளர் பிரியதர்ஷினி மருத்துவமனைக்குச் சென்று கேசியர் முகேஷை தேடி உள்ளார். அப்போது அவர் அங்கு இல்லை.

இதையடுத்து வங்கிப் பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகமற்றொருவரை கேசியரை நியமித்து பணியை பார்க்கச் சொல்லியுள்ளார். அப்போது கணினியில் வங்கி பணம் இருப்பு தொகை 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அந்த ரொக்க பணம் முழுவதும் காணவில்லை என்பது தெரியவந்தது உடனடியாக கேசியர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேசியர் முகேஷ் எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யான காரணத்தை கூறி விட்டு வங்கிப் பணத்தை அள்ளிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் முகேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கேசியரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து வங்கி பணத்தை பெற்று செய்து தருமாறு மேலாளர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து மேலாளரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் பணத்துடன் தலைமறைவான கேஷியர் முகேஷ் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். கேசியரே வங்கி பணத்தை அள்ளிக் கொண்டு தலைமறைவான சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

bank cashier hospital police villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe