விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பர்கத் நகரைச் சேர்ந்த காதர் மொகிதீன் என்பவரின் மகன் நிசார் அகமத் (வயது 30). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர்கேரள மாநிலத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கியுள்ளார். இவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் நேற்று (27/05/2020) பகல் 12.00 மணியளவில் கோட்டக்குப்பம் சமரசம் நகர் பகுதியில் அவரை இரண்டு பேர் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தையே எடுத்துக்கொண்டு தப்பியோடி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கே வந்து விசாரணை மேற்கொண்டார். நிசார் அகமது சில தினங்களுக்கு முன்பு கையில் செருப்பை வைத்துக்கொண்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளை விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா? என்றும், கஞ்சா விற்பனை செய்தவர்களைக் காட்டிக் கொடுத்ததால் கொலை செய்யப்பட்டாரா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.