/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vadivelu.gif)
தூத்துக்குடியில் வடிவேலுபட நகைச்சுவை போல் ஒரு கிராமமே கிணற்றைக் காணவில்லை என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளது.
தூத்துக்குடி வேர்வைக்காரன்மடம் கிராமத்தில் கிறிஸ்தவமற்றும் இந்துவழிபாட்டுத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. தேவாலயம் அருகே அரசின் புறம்போக்கு நிலத்தில் பொதுக்கிணறு இருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கிணற்றை மூடி அதன் மேல்தேவாலயத்திற்கானகட்டடம் கட்டும் பணி நடைபெற்றது. ஏற்கனவே இதுகுறித்துகிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகி அங்குகிணறு இருந்த இடம் குறித்து விளக்கம் கேட்டதற்கு,அங்கு நூலகம்வருவதாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர்கூறியுள்ளனர். ஆனால்,தற்போது தேவாலயத்திற்கான கட்டடம் வரும்எனத்தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள்ஊரிலிருந்தகிணற்றைக் காணவில்லை என வேர்வைக்காரன்மடம் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த இடத்தில் நூலகம் கட்டித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிராமத்தினர்,"எங்கஊர்லகெணத்தகாணோம். எங்கதான்களவாண்டுட்டுபோனாங்கன்னுதெரியல" எனக் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)