Advertisment

ஆவேசமாகப் பாயும் காட்டாற்று வெள்ளம்... அதிர்ச்சியளிக்கும் மக்களின் ஆபத்தான பயணம்...

Villagers who are not responsible for the wild floods ... The authorities are shocked by the dangerous journey!

தமிழகத்தில் பரவலாக மழைபொழிந்து வரும் நிலையில் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் அதி கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மழையால் பல இடங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Villagers who are not responsible for the wild floods ... The authorities are shocked by the dangerous journey!

இந்நிலையில், கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தைச் சிறிதுகூட பொருட்படுத்தாமல் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் கடப்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கொம்பை என்ற இடத்தில் பெரும் ஓடை ஒன்று உள்ளது. அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி கிராமவாசிகள் ஆவேசமாகப் பாயும் காட்டாற்று வெள்ளத்தைச் சிறிதுகூட பொருட்படுத்தாமல் ஆபத்தான நிலையில் அந்த ஓடையைக் கடந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

flood weather Dindigul district kodaikanal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe