Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

வடலூர் அருகேதென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்மனைவி வெண்ணிலா என்கின்ற குமாரி(30); மணிகண்டன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி குமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தென்குத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்லுக்குழி மணல் குவாரியில், வடலூர் நகராட்சி குப்பை கொட்டப்படுவதால் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குமாரியும் டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி குப்பை கொட்டப்படும் கல்லுக்குழி மண் குவாரி பகுதியில் திரண்டனர்.

Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் வடலூர் நகராட்சி குப்பை இங்கு கொட்டப்படுவதால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை குப்பை கொட்ட கூடாது எனக் கூறியும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இங்க குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால் அங்கு சென்று கேட்போம் எனக்கூறி அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த வடலூர் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் சிவகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதுகுறித்து வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமாரை கேட்டபோது அந்த பெண் இறந்ததுக்கும் குப்பை கொட்டியதுக்கும் சம்பந்தம் இல்லை. பல இடங்களில் டெங்கு உள்ளது. ஆனால் அந்த பெண் இறந்தது டெங்குவால்இல்லை, இனிமேல்தான் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும்எனக்கூறினார். இதுகுறித்து மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்த பெண் டெங்குவால் தான் இறந்துள்ளாரா? என சரியான விளக்கத்தை கூறினால் தான் மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சம் போகும் எனக் கூறப்படுகிறது.