திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது கோம்பைப்பட்டி கிராமத்தில்இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தமிழக அரசை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

Villagers struggle to boycott elections

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் புகார் மனுக்கள் கொடுத்தும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இளைஞர் தினேஷ்குமார் தலைமையில் வீதிகளில் கருப்புக்கொடி காட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கிராமத்தின் அனைத்து அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தருபவருக்கே வாக்களிக்கப் போவதாக கூறினர். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி என்பதால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.