Advertisment

“இனி கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது” - கிராம மக்கள் உறுதிமொழி

Villagers pledge against illicit liquor in presence of Collector

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகதகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர்நேற்று(21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

Villagers pledge against illicit liquor in presence of Collector

அந்த ஆயவின் போது சிக்கிய 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறினர். அதன்பின்னர், அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது; அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Advertisment
people trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe