Skip to main content

குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் வனவிலங்குகள்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Villagers fear wild animals roaming inside residential areas nilgiri

 

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும், குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வரத் துவங்கி விட்டன.

 

இந்நிலையில், குன்னூர் பகுதி சிங்காரா எஸ்டேட்  தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. அந்த தோட்டத்தின் நடுவில் இருக்கும் பாறை மீது ஓய்வு எடுத்த சிறுத்தையைப் பார்த்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சிறுத்தையை வீடியோ எடுத்த தொழிலாளர்கள் அதை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் ''இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று குன்னூர் வனச்சரகர் சசிகுமார் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து, கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில், கோத்தகிரி கண்ணிகா தேவி காலணிக்கு இரண்டு கரடிகள் உலா வந்தது. இதைப்பார்த்து, பதறிய பொதுமக்கள் சுற்றித்திரியும் கரடிகளை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வனவிலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
3 people incident wild animal issue Rahul Gandhi consoled in person

வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்த வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று ஒருநாள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இதனையடுத்து வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்படி யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் அஜீஷின் என்பவர் வீட்டிற்கும், புலி தாக்கியதில் உயிரிழந்த பிரஜீஷின் வீட்டிற்கும், சுற்றுலா வழிகாட்டி பாலின் வீட்டிற்கும் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Next Story

வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு; கோவிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

4 women who were swept away flood while returning from temple lost their lives

 

நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே உள்ள சீகூர் வனப் பகுதியில், பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை விசேஷ நாட்களில் மட்டுமே திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம். அதற்கேற்ப, கார்த்திகை தீபத் திருநாளில் இந்த கோவில் திறக்கப்பட்டு பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்றது. இதையறிந்த உதகை, கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். ஆனால், இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் வனப் பகுதியில் இருக்கும் ஆனிக்கல் ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். 

 

இந்நிலையில், காலை நேரத்தில் ஆற்றுப்பகுதியில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், பக்தர்கள் வெகுவாக கடந்து சென்றனர். அந்த சமயத்தில், மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆனிக்கல் ஆற்றுப் பகுதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தனர். அதிலும், சிலர் ஒவ்வொருவராக ஆற்றைக் கடக்க முயன்றபோது ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய 4 பெண்கள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சீகூர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இரவு சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

 

அதன் பிறகு நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடங்கிய நிலையில் விமலா, சரோஜா, வாசுகி ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுசீலா என்ற பெண்ணின் உடலைத் தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.