
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் துக்க நிகழ்வில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் எமனாயகம் என்பவர் மூத்த மகள் வீட்டில் வசித்து வந்தார். தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த எமனாயகம்கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் புதுக்கோட்டை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்ற நபர் மாம்பாக்கத்தை சேர்ந்த பாபு என்பவரிடம் மது போதையில் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊர் பிரச்சனையாக உருவெடுத்தது. இதில் இரு தரப்பு மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)