Published on 17/12/2021 | Edited on 17/12/2021

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையடுத்து, கிராம மக்கள் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியகாடம்பட்டி ஏரிக்கு பெரியேறிபட்டி ஏரியில் இருந்து உபரிநீர் சென்றதால் நேற்று (16/12/2021) மாலை நிரம்பியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஏரிகோடி பகுதியில் வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், பூஜைகள் செய்தும் மஞ்சள், குங்குமம் கொட்டியும் வழிபட்டனர்.
மேலும், ஏரியில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படக் கூடாது என ஆடுகள் மற்றும் கோழிகளைப் பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.