Skip to main content

இடைத்தேர்தலை நடத்தக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்! 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Villagers besiege collector's office demanding by-elections

 

அரியலூர் மாவட்டம், ரெட்டியார்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனால், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலியானது. 

 

தற்போது, தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலோடு ரெட்டியார்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அறிவிப்பு வெளியாகாததால், அவர்கள் நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளாக வந்து முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறியுள்ளனர். 

 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதியிடம் ரெட்டியார் பாளையம் கிராம மக்கள் விரைவில் தங்கள் கிராமத்திற்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் ஊர் மக்கள், ‘ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலியாக உள்ளதால் கிராமத்தில் அத்தியாவசியத் தேவை மற்றும் மக்கள் பிரச்சனைகளை செய்வதற்கும் சிரமமாக உள்ளது’ என கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்