
இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே காதல் திருமணம் செய்தவர்களை பத்து ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் வாட்டாச்சியரின்நடவடிக்கையால் இந்த சம்பவத்தில் தீர்வு கிடைத்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ள தெற்கூரை சேர்ந்த பரமேஸ்வரன், உமாவதி தம்பதிகள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரனுக்கும், வாலாந்தரவை அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்த உமாவதிக்கும் பொள்ளாச்சிக்கு கூலி வேலைக்கு சென்ற போதுபழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரன் மற்றும் உமாவதி தம்பதிகள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்களது வீட்டில் ஏற்றுகொள்ளவில்லை. அதையும் மீறீ இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இதில் பரமேஸ்வரன் வீட்டில்இருவரையும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உமாவதி வீட்டில் மட்டும் காதல் திருமணம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து காதல் திருமணம் செய்யப்பட்டதையடுத்து பரமேஸ்வரன் மற்றும் உமாவதி தம்பதியினர் கோயிலில் சாமி கும்பிடவோ, பொது குடிநீர் குழாய் குடி நீர் பிடிக்கவோ, ஊரில் நடக்கும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோகூடாது என ஊரைவிட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கிவைத்துள்ளனர்அந்தஊரில் ஒருதரப்பினர்.. இதையடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் உமாவதியின் தாய் முத்துராக்கிற்கு சொந்தமான ஊருக்குள் உள்ள 36 சென்ட் நிலத்தை தனது மகள் உமாவதிக்கு கிரயமாக எழுதி கொடுத்துள்ளார்.
இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர் அந்த இடத்தில் குடியேறக்கூடும் என்ற அச்சத்தில் தெற்கூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இடத்திற்கு செல்லும் பொது பாதையை கருவேல முள் செடிகளை கொண்டும், கம்பி வேலியை வைத்தும்அடைத்து இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து இராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து இரு தரப்பையும் விசாரித்து பொதுப்பாதையை அடைத்த முள்வேலியை தற்போது அகற்றியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பையும் வட்டாட்சியர் அழைத்து சுமுகமாகப் பேசி சமரசம் செய்து வைத்தார்.இதனால் 10 ஆண்டுகளாக நீடித்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. உமாபதி குடும்பத்தினர் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)