Advertisment

3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கூறுப்பட்டி.. பொதுமக்கள் போராட்டம்

The village struggle without electricity

Advertisment

புதுக்கோட்டையில் 3 நாட்களாக மின்சாரம் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் அருகே உள்ள கூறுப்பட்டியில் 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்மாற்றி பழுதால் மின்சார விநியோகம் இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். மின்மாற்றியை பழுது நீக்க 40 நாட்கள் ஆகும் என்றதோடு, செலவுக்கான 68 ஆயிரத்தை மக்களே தரவேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

village electicity Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe