கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முத்தனக்குப்பத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அதையடுத்து இப்பள்ளிக்கு அப்பகுதி வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஒரு லட்சம் மதிப்பிலான, பீரோ, நாற்காலி, கணினி, பிரிண்டர், பலகை உள்ளிட்டவைகளை மேள தாளத்துடன் சீர் வரிசையாக கொண்டு வந்தனர்.
சீர் வரிசையாக கொண்டு வந்த பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் வரவேற்று பெற்று கொண்டனர். மேலும் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வி திறன் மேம்படவும், வளர்ச்சி அடையவும் சீர் வழங்கிய பொதுமக்களுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.