ADVERTISEMENT

இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுத்த குக்கிராமத்து சிங்கம் கோமதி

05:29 PM Apr 23, 2019 | kalaimohan


23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT


திருச்சி புனித சிலுவை கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.. எப்போதும் தடகள போட்டியை மட்டும் கடைசி வரை விடவில்லை. என்பதால் அவருடைய விட முயற்சி இந்தியாவிற்கு தங்கத்தை பெற்று தந்திருக்கிறது.

ADVERTISEMENT



திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முடிகண்டம் என்கிற கிராமத்தில் ஒரு பண்ணையில் கூலித்தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர் ந.மாரிமுத்து. இவர் தன்னுடைய கடைசி மகளான கோமதி. அதிகாலை 3 மணிக்கு எழுந்ததும் அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு மைதானத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய விடமுயற்சிக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறார்.



மாரிமுத்துவுக்கு ஒரு மகன், 3 மகள்களுடன் குடும்பம் வறுமையில் தவித்தபோது மாரிமுத்து - ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து தொடர்ச்சியாக போட்டிகளில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்கள். இதன் விளைவாக 2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார்.



இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.



இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் விளையாட்டு பிரிவுகளில் தேர்ச்சி பெற்று பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். இருந்தாலும் தொடர்ச்சியாக தடகள போட்டியில் கலந்து கொண்டவரின் விட முயற்சி இந்தியாவிற்கு தங்கத்தை வென்று காட்டியிருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் போட்டியில் கோமதி பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற தகவல் கூட செய்தியாளர்கள் இங்கு வந்ததற்குப் பிறகுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது இந்த கிராமத்தில் இருந்து பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தொடர்வதற்கு அதிகாலை 3 மணிக்கே எழுந்து நடந்து செல்வதும் பேருந்தில் சென்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுப்பதும் அவரது வாழ்க்கையில் வாடிக்கையான ஒன்றாக மாறி இருந்தது கோமதியின் வளர்ச்சியில் அவரது தந்தையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


அவர் வாழ்ந்த காலத்தில் தன் மகள் ஒரு சாதனையாளராக மாற வேண்டும் என்ற முனைப்போடு கோமதிக்கு உறுதுணையாகவும், ஊக்கமாகவும் இருந்துள்ளார் வறுமையிலும் தொடர்ச்சியாக விடமுயற்சியாக தன் மகள் வாங்கி குவித்த வெற்றி பதக்கங்களை கோமதியின் அம்மா ராசாத்தி குவியாலாக கையில் எடுத்த சந்தோஷப்பட்ட காட்சி இந்த வெற்றியையும் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு மாரிமுத்து இல்லை என்ற கவலை அவரது குடும்பத்தினரிடம் மேலோங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT