விவசாய நிலத்தைச் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைத்தடுப்பதற்காக போடப்பட்டமின்வேலி,அதனைஅமைத்த விவசாயியின்உயிரையே குடித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள களவரம்பூண்டி கிராமத்தில் குத்தகைக்கு நிலத்தைஎடுத்துவிவசாயம் செய்து வந்துள்ளார்ராமசாமி என்ற விவசாயி. நிலக்கடலை விதைத்திருந்த ராமசாமி விளைநிலத்தைச் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைத்தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தண்ணீர் பாய்ச்சசென்ற ராமசாமி தெரியாமல் கால் இடறி மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என்பதால்சோலார் மின்வேலிகளை வேளாண்துறைஅதிகாரிகள் பரிந்துரைத்து வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.