Advertisment

இன்று கூடுகிறது கிராம சபை... முதல்வர் பங்கேற்பு!

mk

Advertisment

இன்று (ஏப்.24) 'பஞ்சாயத்துராஜ் தினம்' கடைபிடிக்கப்படுவதை ஒட்டி 'நீடித்த வளர்ச்சி இலக்குகள்' குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதியான இன்று நடைபெற இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்குமுன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காட்டில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்றுஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார்.

TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe