Advertisment

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கிராம கமிட்டியினர் மனு!

Village committee petitions for permission to hold Jallikattu

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திருச்சி, புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பொங்கல் திருநாள் வருகின்ற ஜனவரி மாதம் வருவதையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தற்போது பல மாவட்டங்கள் தயார் செய்துவருகின்றனா்.

Advertisment

அதில் திருச்சி திருவெறும்பூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு போட்டியை வருகின்ற தை மாதம் 6ஆம் தேதி (19-01-2022) சிவன் கோவில் பொது மந்தை இடத்தில் நடத்துவது என கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.எனவே இந்தப் போட்டியினை தமிழ்நாடு அரசின் விதிமுறைகள்படியும் மற்றும் உச்ச நீதிமன்ற விதிமுறைகளின்படியும் நடத்துவதாக கிராம மக்கள் உறுதியளித்து, மாவட்ட ஆட்சியரிடம் கூத்தைப்பார் கிராம கமிட்டியினர் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனா்.

Advertisment

people jallikattu trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe