Village Assistant Officer should know how  ride bicycle

"இந்த வேலை கிடைக்கணும்னா... ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியணும்" கிராம உதவியாளர் பணிக்காகதட்டுத்தடுமாறி சைக்கிள் ஓட்டும் பெண் விண்ணப்பதாரர்களின் வீடியோதற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திப்பம்பட்டி, சேர்வகாரன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கஞ்சம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில்கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனைமலை வட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என தங்கள் சுய விபரங்களுடன் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது.

Advertisment

அதில், தேர்வு செய்யப்பட்ட171 நபர்களுக்குகடந்த 9 ஆம் தேதியன்றுஆனைமலை வட்டாட்சியர் ரேணுகாதேவி தலைமையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் துணை வட்டாட்சியர் அனுசியாவும் கலந்து கொண்டனர். இந்தப் பணிக்கு சைக்கிள் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் என்பதால், நேர்முகத்தேர்வுக்கு வந்த பெண் விண்ணப்பதாரர்கள்வட்டாட்சியர்அலுவலகத்திற்கு வெளியே சைக்கிள் ஓட்டிக் காண்பித்தனர்.

அப்போது சிலர் சைக்கிள் ஓட்டத்தெரியாமல் தடுமாறினார்கள். இதுகுறித்து, அங்கிருந்த அரசு அதிகாரிகள் கூறும்போது, "பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு 9 இடங்கள் காலியாக உள்ளது. மேலும், ஆனைமலை வட்டத்தில் உள்ள தேவிபட்டணம், குப்புச்சிபுதூர், சுப்பையகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத்தெரிவித்தனர்.