Advertisment

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Village administration officer arrested in bribery case

Advertisment

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில்கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

arrested police VAO
இதையும் படியுங்கள்
Subscribe