Advertisment

'விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'-வீடியோவில் ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

'Vikravandi by-election' - M.K.Stalin asked for support in the video

Advertisment

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும், ''விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர். மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா. 1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்'' என தெரிவித்துள்ளார்.z

byelection Vikkiravandi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe