Skip to main content

வால்மார்ட் நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட்டால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் - விக்கிரமராஜா

Published on 11/05/2018 | Edited on 12/05/2018

வால்மார்ட்டை நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட்டால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    

இதுகுறித்து அவர் அளித்து பேட்டியில், 
 

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும். ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது.

இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
 

Wickramarajah is the Walmart company

 

 


 

காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.

ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும். தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும். 
 

இந்திய வணிகர்களை காப்பற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை காணாத மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“விலைவாசி உயர்வை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும்” - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

vikrama raja said that the government should control the rise in prices

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், “தேசிய நெடுஞ்சாலைகளில் ஆறு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நிலையில்  பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பயணத்திற்கான கால நேரங்களை விரயம் செய்து வருகின்றனர்.

 

அனைத்து அரசியல் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் வருகின்ற வாரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி அனைத்து பொது அமைப்பினரை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர இருக்கிறோம். போராட்டத்தின் போது பேச்சுவார்த்தைக்கு வரக்கூடிய அதிகாரிகள் சாலை விரிவாக்கப் பணிகளில் முடிவு நாட்களை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.  

 

விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் மற்றும் மருந்துகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு செய்து தர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும். மழைக் காலங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து காய்கறிகள் தேக்கமடைவதன் காரணமாக அழுகி பாதிப்புக்குள்ளாகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் விளைகின்ற காய்கறிகளை பதப்படுத்தும் விதமாக அனைத்து விவசாயப் பகுதிகளிலும் குளிர்சாதன கிடங்குகளை அமைத்து காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதன் மூலம் பதப்படுத்தி வைக்கப்படுகின்ற காய்கறி பொருட்களை தடையின்றி வழங்கும்போது விலைவாசி உயர்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

 

வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைவாசி உயர்வுக்கு, டோல்கேட் கட்டணம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகவே உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலைவாசி உயர்வுகளுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல எனவும் விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

 

 

Next Story

வால்மார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை வணிக அதிகாரி...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

வால்மார்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை வணிக அதிகாரியாக சமீர் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

ww

 

 

துணைத் தலைவராகவும் முதன்மை இயக்குனர் அதிகாரியாகவும் இருந்த தேவேந்திர சாவ்லா ராஜினாமா செய்தபிறகு இந்த அறிவிப்பை வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் சமீர் அகர்வால், தேவேந்திர சாவ்லா வகித்துவந்தப் பதவிகளான துணைத் தலைவர், முதன்மை இயக்குனர் அதிகாரி பதவிகளுடன் சேர்த்து நிர்வாக அதிகாரி பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.