நேற்றுதனது நண்பர்களுடன்நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டுகாரில் வந்துகொண்டிருந்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் அதிகாலை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் வந்துகொண்டிருந்தார். அவர் ஓட்டிவந்த சுசுகி பலேனோ கார் மிக அதிக வேகத்தில் ஆர்.கே நகரை நோக்கி சென்றதாக கூறப்பட்ட நிலையில் சாலையோரம் போஸ்ட்டர் ஒட்டிவிட்டு ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்மீது மோதியது அதனால் அந்தநபர் காயமடைந்தார், ஆட்டோவும் சேதமடைந்தது. ஆனால் இந்த விபத்து சம்பவத்தில் காரை நிறுத்தாத துருவ் விடாமல் மீண்டும் காரை வேகமாக ஒட்டி சென்றுள்ளார் என கூறப்பட்ட நிலையில்சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே மீண்டும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் மாட்டிக்கொண்டது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை தொடர்ந்து பாண்டிபஜார் புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுஅவர் மீது வாகனங்களை அதிவேகமாக ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகள் பதிவு செய்துபின்னர் ஜாமீனில் வெளிவிடப்பட்டார். இதில் காயமடைந்த ஆட்டோ டிரைவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.