/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vk_3.jpg)
விக்ரம் படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் படமாக அமையப் போகிறது எனஉதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின.
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீசிற்கு முன்னதானப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், " விக்ரம் திரைப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம் பிடிக்க இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)