இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய கதையில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கக்கூடாது என்று ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வ்

Advertisment

இது குறித்து விஜய்சேதுபதி, ’’இந்தப்படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றியது அல்ல. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை முக்கியமான அங்கமாக இருக்கும். என் மீது அன்பு வைப்பவர்கள் யாரையும் நான் இழக்க மாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சி கூட இந்தப்படத்தில் இருக்காது.

Advertisment

என் மீது அன்பு செலுத்துகிறவர்களை காயப்படுத்தும் வேலையை நான் எப்படிச்செய்வேன். நான் அவ்வளவு சுயநலமான ஆள் கிடையாது. இதையும் மீறி காயப்படுத்துவது போல் நடந்துகொண்டால் சின்ன குழந்தையாக இருந்தால் கூட மன்னிப்புக்கேட்கத் தயங்கமாட்டேன்’’என்று விளக்கம் அளித்துள்ளார்.