நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினரின் நடத்திய சோதனை திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு கால்ஷீட் புக் ஆகிவிட்ட நிலையில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. திரையுலகில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் விஜய்சேதுபதி.இந்நிலையில்,சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து, வழக்கமான ஆய்வு என்று வருமான வரித்துறையினர் பதிலளித்துள்ளனர்.