/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3124_0.jpg)
நேற்று நடைபெற்ற தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையில், 'மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே. தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார்கள்' எனப் பேசியிருந்தார்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக தரப்பில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''யார் யாருக்கு போட்டி ; யார் யாரோடு செல்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்கு கவலை.எங்கள் கட்சியில் நாங்கள் உழைப்போம்;நாங்கள் ஜெயிப்போம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)