beast

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம். இன்று காலை வெளியான நிலையில் திரையரங்குகளில் நடனமாடியும் பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ''எல்லாத்தையும் இந்தியிலேயே ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது; வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா'' என விஜய் பேசுவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து அவர்பேசியிருந்தவசனம்கவனத்தை ஈர்த்த நிலையில் தற்பொழுது இந்த வசனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.