
வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.
அதேபோல் திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறுவதற்கான தேதியை அறிவித்திருந்தன. இந்நிலையில், பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தேமுதிக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ள தேமுதிக தலைமை, தமிழக சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும், புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.