திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் கலைஞரின் இல்லத்தின் முன்பும் கூடியுள்ள திமுக தொண்டர்கள் மெரினா வேண்டும்... மெரினா வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்,” திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் இருக்கும் அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்ய அரசு அணுமதி தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.