Advertisment

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்..! 

Vijaykanth returns home from hospital

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கிறார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளும் அவர் எடுத்துக்கொண்டுவருகிறார். சமீபத்தில் கூட வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். அதன்பிறகு கரோனா தொற்று ஏற்பட்டுசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று திரும்பியிருந்தார்.

Advertisment

இந்தநிலையில், விஜயகாந்துக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்நேற்று (11.08.2021) பிற்பகலில்தகவல் வெளியானது. ஆனால், விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் சென்ற விஜயகாந்த், இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

Advertisment

dmdk vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe