Advertisment

நீங்கள் தயாரா? - தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு!

Vijaykanth gives advice to volunteers!

தமிழகத்தில் மீதம் உள்ள நகராட்சி இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசு முனைப்புக்காட்டிவரும்நிலையில், அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டங்களைஅவ்வப்போது நடத்திவருகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும்உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாககமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதேபோல் சீமானின்நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிகவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட தேமுதிகவினர் தயாராக இருக்க வேண்டும்எனஅவர் தேமுதிக தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

local election dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe