yui

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இன்று (19.05.2021) அதிகாலை மூன்று மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது தேமுதிக சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

அதில், "விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment