Advertisment

பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரணி; காங்கிரசார் கொண்டாட்டம்!

Vijayatharani joined BJP Congress celebration

கடந்த மூன்று முறை தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் விஜயதாரணி. இவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாகத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். அந்த பதவியும் கிடைக்காமல் போன பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாகத்தகவல்கள் வெளியாகி இருந்தன.

Advertisment

முன்னதாக அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த இருந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில், விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததையடுத்து மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் விஜயதாரணியின் உருவப்படத்தை எரித்தும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

Kanyakumari congress Vijayadharani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe