na

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி புகழ் பெற்ற நாகூர் தர்காவில், தேமுதிக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர்.

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று சென்னை திரும்பினார். அவர் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று தேமுதிக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Advertisment

இதில் பங்கேற்ற தேமுதிக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் தர்காவில் பிரார்த்தனை செய்த புனித நீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.