
திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த், வீடியோ மூலம் கண்ணீர் மல்க தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில்,
கலைஞர் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 5 முறை முதலமைச்சராக இருந்தவர். 5 முறையும் கட்டுக்கோப்பாக தமிழகத்தை வழிநடத்தியவர்.
நான் அமெரிக்காவில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் கலைஞரிடம் தான் இருக்கிறது. நானும் அவரும் ரொம்ப நன்றாக பழகியுள்ளோம். அவரை விஜி விஜி என்று செல்லமா என்னை கூப்பிடுவது தான் நியாபகத்திற்கு வருகிறது என கண்ணீர் வீட்டார்.
கலைஞரின் மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் போனார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தேமுதிக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WeiuqmCzkF
— Vijayakant (@iVijayakant) August 8, 2018