ADVERTISEMENT

"ராமதாஸ் எனக்குக் கொடுத்த அசைன்மெண்ட் இதுதான்” - வெளிப்படையாகப் பேசிய வேல்முருகன்!

02:48 PM Mar 16, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணைந்ததை அடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், ‘’நான் இப்படி பேசுறேன்னு நினைக்காதீங்க. விசயம் தெரியணும் என்பதற்காக சொல்கிறேன். ’’விஜயகாந்துன்னு ஒரு குடிகார க... இருக்குறான். அந்த குடிகாரன் வடதமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் கொடி ஏத்துறான். இந்த நா.... ஊர் ஊரா அவனுக்கு கொடி கட்டுறானுங்க. நீ என்ன பண்ணுற வேலு... நீதான் தளபதி..நீதான் இந்த கட்சி...உன்னை நம்பித்தான் நானே இருக்கிறேன். வடதமிழ்நாட்டில் எங்கும் விஜயகாந்த் கட்சி கொடி பறக்கக்கூடாது’’என்பதுதான் ராமதாஸ் எனக்கு கொடுத்த வேலை. விஜயகாந்தையும், சொந்த இன மக்களையும் அத்தனை இழிவாக பேசினார். நான் போய் அந்த கொடியையெல்லாம் அவிழ்க்கச்சொல்லி, கொடி கம்பத்தை அறுத்து.. விஜயகாந்த் தொண்டர்களூடன் சண்டை போட்டு...நான் இன்றைக்கு விஜயகாந்துக்கு எதிரி.

விஜயகாந்த் உடன் சட்டமன்றத்தில் ஐந்து ஆண்டுகாலம் பழகியிருக்கிறேன். எந்தவித சூதுவாதும் இல்லாமல் சட்டமன்றத்தில் என்னிடம் வந்து சட்டமன்ற நடவடிக்கைகள் என்ன என்று என்னிடம் கேட்டார். சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.. எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் வெகுநேரம் என்னிடம் கலந்துரையாடினார். இன்றைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். விஜயகாந்த் நல்ல மனம் படைத்த மனிதர். பிரேமலதா குறித்து எனக்கு மாற்று கருத்து உண்டு. விஜயகாந்த் சொந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், நான் கடவுளாக வணங்கிய மருத்துவர் ராமதாஸ், ஒவ்வொரு மாநாட்டிற்கும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் வன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT