/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijayagath.jpg)
சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (19.10.2018) கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமை வகித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன், கழக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த், கழக கொள்கைப்பரப்பு செயலாளராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டடத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
விஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவதும், பொறுப்பு வாங்குவதும் ரொம்ப கஷ்டம். சாதாரண ஒரு விஷயத்துக்கெல்லாம் அவரிடம் பாராட்டு வாங்கிட முடியாது. கடினமா உழைப்பு, கடினமான சவாலை நிருப்பித்தால்தான் அவரிடம் பாராட்டு வாங்க முடியும். பொறுப்பு வாங்க முடியும்.
14 வருடங்களாக தே.மு.தி.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்த எனக்கு இன்றைக்கு பொருளாளர் பதவி விஜயகாந்த் கொடுத்துள்ளார். இங்கு சாதாரண தொண்டராக இருந்தாலும் மிக உயர்ந்த பதவியை விஜயகாந்த் தருவார், எந்த சூழ்நிலையில் யாருக்கு என்ன பதவி தர வேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார். பொருளாளர் பதவியை எனக்கு அளித்த அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)