velmurugan

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட் செய்துள்ளார்.

Advertisment

thi

சிங்கப்பூரிலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த ஒரு வாரகாலமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சமூக வலைத் தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. உடனே, தேமுதிக தலைமைக்கழகம், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவசர அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.